Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கம்யூ., ஆர்ப்-பாட்டம்

மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கம்யூ., ஆர்ப்-பாட்டம்

மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கம்யூ., ஆர்ப்-பாட்டம்

மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கம்யூ., ஆர்ப்-பாட்டம்

ADDED : ஜூலை 30, 2024 03:13 AM


Google News
அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் வகையிலான மின் கட்டண உயர்வை உடன் திரும்ப பெற வேண்டும். மின் கட்டணத்தை மாதம் தோறும் கணக்கீடு செய்ய வேண்டும். மின் வினியோ-கத்தை தனியாருக்கு வழங்கும் மின்சார திருத்த சட்டத்தை மத்-திய அரசு திரும்ப பெற வேண்டும். மாநில உரிமைகளை பறிக்கும் உதய் மின் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஈரோடு மாநகர், மாவட்டத்தில் கம்யூ., கட்சியினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதன்படி ஈரோட்டில், இ.கம்யூ., வட்டார செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் ராஜமா-ணிக்கம், ரவிசந்திரன், வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், கோரிக்கை குறித்து பேசினார். மாவட்ட பொருளாளர் ரமணி, வட்டார குழு உறுப்-பினர் மகாலிங்கம், பொருளாளர் மகேஷ் உட்பட பலர் பேசினர்.

* பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒன்றிய செய-லாளர் செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு (தெற்கு) மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் துளசிமணி, திருநாவுக்கரசு, ஒன்றிய துணைச் செயலாளர்கள் தங்கவேலு, உமாநாத் சிங் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.* கோபியில் கோபி ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ். சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பரமேஸ்வரன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.* சத்தி புது பஸ் ஸ்டாண்ட் அருகில், இ.கம்யூ., நகர செயலாளர் ஜமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் முன்னிலையில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை விளக்கி இ.கம்யூ., வடக்கு மாவட்ட செயலாளர் மோகன் குமார் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us