/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 30க்குள் வேட்பாளர்கள் கணக்கு தாக்கல் செலவின பார்வையாளர் 27 ல் வருகை 30க்குள் வேட்பாளர்கள் கணக்கு தாக்கல் செலவின பார்வையாளர் 27 ல் வருகை
30க்குள் வேட்பாளர்கள் கணக்கு தாக்கல் செலவின பார்வையாளர் 27 ல் வருகை
30க்குள் வேட்பாளர்கள் கணக்கு தாக்கல் செலவின பார்வையாளர் 27 ல் வருகை
30க்குள் வேட்பாளர்கள் கணக்கு தாக்கல் செலவின பார்வையாளர் 27 ல் வருகை
ADDED : ஜூன் 07, 2024 07:32 PM
ஈரோடு:ஈரோடு லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட, 31 வேட்பாளர்களும் இம்மாதம், 30க்குள் தங்கள் செலவு கணக்குகளை தாக்கல் செய்கின்றனர்.
ஈரோடு லோக்சபா தொகுதியில், 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வேட்பு மனுத்தாக்கல் முதல் தங்களது தேர்தல் செலவினங்களை கணக்குகளாக உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தலுக்கு முன் 3 கட்டமாக தேர்தல் செலவினங்களை தாக்கல் செய்தனர். ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்த நாள் வரையிலான செலவினங்களை, உரிய ஆவணங்களுடன் வரும், 30க்குள் கணக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதுபற்றி, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
வேட்பாளர்களுக்கு செலவினங்களை எவ்வாறு தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறை வழங்கி உள்ளது. இதன்படி ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட, 31 வேட்பாளர்களும், வரும், 30க்குள் தாக்கல் செய்வர். இவற்றை இறுதி செய்வதற்காக, வரும், 27 ல் தேர்தல் செலவின பார்வையாளர்கள், வந்து ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவர். வேட்பாளர் தரப்பில் முறையாக கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் நோட்டீஸ் வழங்கி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினர்.