Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா நாளை துவக்கம்

அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா நாளை துவக்கம்

அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா நாளை துவக்கம்

அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா நாளை துவக்கம்

ADDED : ஆக 06, 2024 01:41 AM


Google News
அந்தியூர், அந்தியூர், புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோவிலில் நடப்பாண்டு ஆடி தேர்த்திருவிழா நாளை தொடங்குகிறது. தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருவார்கள். மேலும், திருவிழாவை ஒட்டி தென்னிந்திய அளவில் குதிரை மற்றும் கால்நடை சந்தை நடக்கிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், மக்கள் கலந்து கொள்வர்.

இந்நிலையில் தேர்த்திருவிழா பாதுகாப்பு பணியில், ஏ.டி.எஸ்.பி., தலைமையில் மூன்று

டி.எஸ்.பி.,க்கள், ஆறு இன்ஸ்பெக்டர்கள், உள்ளூர் மற்றும் ஆயுதப்படை போலீசார், ஊர்காவல் படையினர் என, 700 பேர் ஈடுபடவுள்ளனர். விழா நிறைவு பெறும், ௧௧ம் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

ஆடித்திருவிழாவை ஒட்டி அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலம் சார்பில், நாளை முதல், ௧௧ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஈரோடு, பவானி, குருவரெட்டியூர், கோபி, சத்தி, அம்மாபேட்டை, மேட்டூர், கவுந்தப்பாடி, பர்கூர், வெள்ளித்திருப்பூர், எண்ணமங்கலம் பகுதிகளில் இருந்து இயக்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us