/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிவன்மலை கோவிலில் ஆடி கிருத்திகை விழா சிவன்மலை கோவிலில் ஆடி கிருத்திகை விழா
சிவன்மலை கோவிலில் ஆடி கிருத்திகை விழா
சிவன்மலை கோவிலில் ஆடி கிருத்திகை விழா
சிவன்மலை கோவிலில் ஆடி கிருத்திகை விழா
ADDED : ஜூலை 30, 2024 03:22 AM
காங்கேயம்: காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆடி கிருத்திகையை ஒட்டி, நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டது.
பிறகு சிறப்பு பூஜை, உச்சிகால பூஜை நடந்தது. தொடர்ந்து வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெ-ருமான் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்க-ளுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி அதிகாலை முதலே காங்கேயம், திருப்பூர், படியூர், நத்தக்காடையூர், வெள்ளகோவில், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதேபோல் வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.