/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சாலை குறுக்கே நாய் வந்ததால் வாலிபர் பலி சாலை குறுக்கே நாய் வந்ததால் வாலிபர் பலி
சாலை குறுக்கே நாய் வந்ததால் வாலிபர் பலி
சாலை குறுக்கே நாய் வந்ததால் வாலிபர் பலி
சாலை குறுக்கே நாய் வந்ததால் வாலிபர் பலி
ADDED : ஜூன் 16, 2024 06:21 AM
ஈரோடு : நாய் மீது, பைக் மோதாமல் இருக்க பிரேக் போட்டதில், இழுத்து செல்லப்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்த வாலிபர் பலியானார்.
ஈரோடு, கொல்லன்கோவில் கந்தசாமி பாளையம் அண்ணா நகர் சின்னான் மகன் சுதாகர், 29. தன் வீட்டில் இருந்து, எழுமாத்துாரை அடுத்த சக்தி சுகர்ஸ் கம்பெனி வேலைக்கு வடுகபட்டி சாலையில் நேற்று காலை, 6:00 மணியளவில் ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். ஹெல்மெட் அணிந்து இருந்தார். அப்போது சாலையின் குறுக்கே நாய் வந்தது.
அதன் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டார். அதிவேகமாக சென்றதால், நாய் மீது மோதி சில அடி துாரம் வரை பைக் இழுத்து செல்லப்பட்டது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுதாகருக்கு, இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு கிசிச்சை பலனின்றி இறந்தார். சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.