/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு மாவட்டத்தில் 10,770 மாணவர்களுக்கு பார்வை குறைபாடு ஈரோடு மாவட்டத்தில் 10,770 மாணவர்களுக்கு பார்வை குறைபாடு
ஈரோடு மாவட்டத்தில் 10,770 மாணவர்களுக்கு பார்வை குறைபாடு
ஈரோடு மாவட்டத்தில் 10,770 மாணவர்களுக்கு பார்வை குறைபாடு
ஈரோடு மாவட்டத்தில் 10,770 மாணவர்களுக்கு பார்வை குறைபாடு
ADDED : ஜூன் 16, 2024 06:21 AM
ஈரோடு : ஈரோடு மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் பயின்ற, 10,770 மாணவ,மாணவிகளுக்கு பார்வை குறைபாடு கண்டறியப்பட்டதாக மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்.
தமிழக அரசின், பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், பள்ளி
மாணவ,- மாணவிகளுக்கு பார்வைத்திறன் குறைபாடு கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சையும், கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டு வருகிறது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாணவ, -மாணவிகளின் பார்வை திறன் குறைபாட்டை கண்டறியும் பயிற்சி முகாம், ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
சுகாதாரத்துறை துணை இயக்குனர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாநகர் நல அதிகாரி பிரகாஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட பயிற்சி மருத்துவ அதிகாரி மகேஸ்வரி, மாவட்ட உதவி திட்ட மருத்துவ அதிகாரி வசந்தகுமார், மாவட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி சிறார் மருத்துவ அதிகாரி லோகேஸ், தொற்றா நோய் பிரிவு மருத்துவ அதிகாரி சோமசுந்தரம், மாநகர தாய் சேய் நல அதிகாரி ஜெய்சித்ரா, மாநகர திட்ட மருத்துவ அதிகாரி சங்கர் நாராயணன் ஆகியோர் பேசினர்.
முகாமில் மாணவ, மாணவிகளுக்கு பார்வைத்திறன் செயல்பாடு எதனால் வருகிறது? அதை கண்டறியும் வழிமுறைகள்? பார்வை திறன் குறைபாடு இருந்தால் மேல்பரிசோதனை பரிந்துரை செய்வது ஆகியன குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில், பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில், 1 லட்சத்து 83 ஆயிரத்து, 783 மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, 10 ஆயிரத்து, 770 பேருக்கு கண்ணாடி வாங்கி கொடுக்கப்பட்டு உள்ளது. கண்புரை உள்ளவர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். முகாமில் பயிற்சி எடுக்கும் ஆசிரியர்கள், தங்களது பள்ளியில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பர்.
பிறகு மாணவல -மாணவிகளுக்கு பார்வை திறன் பரிசோதனை செய்யப்படும். இதற்காக பார்வை திறனறியும் அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டையை வெளிச்சமான இடத்தில் பொருத்திவிட்டு 20 அடி இடைவெளியில் மாணவ, -மாணவிகளை நிறுத்தி எழுத்துகளை படிக்க சொல்ல வேண்டும். ஒரு கண்ணை மூடி மற்றொரு கண்ணால் படித்து, இரு கண்களின் பார்வை திறனையும் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது சரியாக படிக்க முடியாத மாணவ, -மாணவிகளின் விவரங்களை பதிவேட்டில் குறித்து வைத்து, மேல் பரிசோதனைக்காக பரிந்துரைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறினர்.