ADDED : மார் 14, 2025 01:42 AM
91 வயது மூதாட்டி தற்கொலை
புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள கணக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் சரசம்மாள், 91; ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணமாகி வெளியூர்களில் வசிக்கின்றனர். கணவர் கருப்புசாமி இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார்.
வயது மூப்பு, உடல் நிலை பாதிப்பால் சில மாதங்களாக மூதாட்டி அவதிப்பட்டு வந்தார். நேற்று மதியம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.