/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ புதிதாக 15 அரசு பஸ்கள் இயக்கம் துவக்கி வைப்பு புதிதாக 15 அரசு பஸ்கள் இயக்கம் துவக்கி வைப்பு
புதிதாக 15 அரசு பஸ்கள் இயக்கம் துவக்கி வைப்பு
புதிதாக 15 அரசு பஸ்கள் இயக்கம் துவக்கி வைப்பு
புதிதாக 15 அரசு பஸ்கள் இயக்கம் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 18, 2024 01:22 AM
ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் - ஈரோடு மண்டலம் சார்பில் புதிதாக வாங்கப்பட்ட, 15 பஸ்களின் இயக்க துவக்க நிகழ்ச்சி நடந்தது.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, புதிய பஸ்கள் இயக்கத்தை துவக்கி வைத்தார். மண்டல பொது மேலாளர் சொர்ணலதா வர-வேற்றார். நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ், கலெக்டர் ராஜ-கோபால் சுன்கரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பஸ்களில், ஈரோடு - குமுளி - 1, ஈரோடு - மைசூரு - 7, கோவை - மைசூரு (சத்தி, சாம்ராஜ் நகர் வழி) - 3, அந்தியூர் - கம்பம் -1, அந்தியூர் - நாகர்கோவில் - 2, கோபி - பங்களா-புதுார், 4 ரோடு வழியாக சத்தி என நகர் பஸ் - 1 என, 15 வழித்-தடங்களில் இயக்கப்படுகிறது.
ஈரோடு மண்டலத்தில் கடந்த, 2021 முதல் தற்போது வரை, 45 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, என அதிகாரிகள் தெரிவித்-தனர்.
எம்.பி., அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோவன், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம், எஸ்.பி., ஜவகர், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.