/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அங்கன்வாடி ஊழியர் வீட்டில் 14 பவுன் திருட்டு அங்கன்வாடி ஊழியர் வீட்டில் 14 பவுன் திருட்டு
அங்கன்வாடி ஊழியர் வீட்டில் 14 பவுன் திருட்டு
அங்கன்வாடி ஊழியர் வீட்டில் 14 பவுன் திருட்டு
அங்கன்வாடி ஊழியர் வீட்டில் 14 பவுன் திருட்டு
ADDED : ஜூன் 11, 2024 08:37 PM
ஈரோடு:ஈரோடு அருகே அங்கன்வாடி ஊழியர் வீட்டில், 14 பவுன் தங்க நகையை, மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ஈரோடு அருகே கஸ்பாபேட்டை குமரன் கார்டனை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். போலீஸ் எஸ்.ஐ.,யான இவர் இரண்டு ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இவரின் மனைவி நாகேஸ்வரி, 52; பூந்துறை அரசுப்பள்ளி அங்கன்வாடி பணியாளர். மகனுக்கு திருமணமாகி செட்டிபாளையத்தில் வசிக்கிறார். நாகேஸ்வரி சொந்த வீட்டில் தனியாக உள்ளார். மகன் வீட்டுக்கு நேற்று முன் தினம் மாலை சென்றவர் அங்கேயே இரவு தங்கி விட்டார்.
நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது முன்புற இரும்பு கதவும், அதை தொடர்ந்து மரக்கதவும் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில், 14 பவுன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது. புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.