/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஏ.டி.எம்.,மில் கூடுதலாக வந்த பணத்தை ஒப்படைத்த மாணவர் ஏ.டி.எம்.,மில் கூடுதலாக வந்த பணத்தை ஒப்படைத்த மாணவர்
ஏ.டி.எம்.,மில் கூடுதலாக வந்த பணத்தை ஒப்படைத்த மாணவர்
ஏ.டி.எம்.,மில் கூடுதலாக வந்த பணத்தை ஒப்படைத்த மாணவர்
ஏ.டி.எம்.,மில் கூடுதலாக வந்த பணத்தை ஒப்படைத்த மாணவர்
ADDED : ஜூலை 23, 2024 01:53 AM
தாராபுரம் : தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காந்தி நகரில், தேசிய வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது.
அலங்கியம் அரசு உயர்நிலைப்பள்-ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் முகிலன், கவுசிக், பணம் எடுக்க நேற்று சென்றனர். பணம் எடுத்தபோது, 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாண-வர்கள், கூடுதலாக வந்த தொகையை அலங்கியம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஒப்படைத்தனர். 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில், பணத்தின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத்தை கண்டறிந்து, மாணவர்கள் முன்னிலையில் அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.