Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் குடிநீர் வசதி செய்ய கோரிக்கை

நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் குடிநீர் வசதி செய்ய கோரிக்கை

நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் குடிநீர் வசதி செய்ய கோரிக்கை

நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் குடிநீர் வசதி செய்ய கோரிக்கை

ADDED : ஜூலை 08, 2024 07:04 AM


Google News
ஈரோடு, : ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் செயல்படும் காய்கறி மார்க்-கெட்டில், 700க்கும் மேற்பட்ட கடை செயல்படுகிறது. காய்கறி வரத்து, வாங்குவதற்கு வரும் மக்கள் என தினமும் பல ஆயிரக்க-ணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால், மார்க்கெட்டில் குடிநீர் வசதி இல்லாததால், வியாபாரிகள் மற்றும் மக்கள் அவதி-யடைந்து வருகின்றனர். குடிநீர் விலைக்கு வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கு காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாக தரப்பில் ஒரு குடிநீர் குழாய் கூட போடவில்லை என்று, வியாபா-ரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: காய்கறி மார்க்கெட்டில் குடிநீர் இல்லாததால் வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமப்படு-கிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us