ADDED : ஜூலை 26, 2024 02:38 AM
ஈரோடு: ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், எஸ்.ஐ., மூர்த்தி தலைமையி-லான போலீசார், தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, பி.பெ.அக்ர-ஹாரம் சத்தி பிரிவு சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடு-பட்டனர்.
அப்போது வந்த ஒரு வேனில், 15 மூட்டைகளில், 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர். வேன் டிரைவரிடம் விசாரித்ததில், ஈரோடு, கருங்கல்பாளையம், செங்-குட்டுவன் வீதியை சேர்ந்த சுப்ரமணி, 36, என்பது தெரிந்தது. மக்-களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, ஆர்.என்.புதுாரில் தங்கி வேலை செய்யும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வதை ஒப்புக்கொண்டார். சுப்ரமணியை போலீசார் கைது செய்து, வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.