Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பஞ்., தலைவி போராட்டம் 'ஓவர்' பேச்சுவார்த்தையில் 'சக்சஸ்'

பஞ்., தலைவி போராட்டம் 'ஓவர்' பேச்சுவார்த்தையில் 'சக்சஸ்'

பஞ்., தலைவி போராட்டம் 'ஓவர்' பேச்சுவார்த்தையில் 'சக்சஸ்'

பஞ்., தலைவி போராட்டம் 'ஓவர்' பேச்சுவார்த்தையில் 'சக்சஸ்'

ADDED : ஜூலை 24, 2024 08:15 AM


Google News
தாராபுரம் : தாராபுரம் யூனியன் அலுவலகத்தில் பஞ்., தலைவி நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது.

தாராபுரம், கவுண்டச்சி புதுார் ஊராட்சிக்கு, நிலுவையில் உள்ள, 2.75 கோடி ரூபாய் வளர்ச்சி நிதியை விடுவிக்க கோரி, தாராபு-ரத்தில் யூனியன் அலுவலக வளாகத்தில், கவுண்டச்சி புதுார் ஊராட்சி தலைவி செல்வி, 36, நேற்று முன்தினம் மதியம் காத்தி-ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், தாசில்தார் கோவிந்-தசாமி பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. இரண்டா-வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தார்.

இரவு, 7:0௦ மணியளவில், ஒன்றிய குழு துணைத்தலைவர் சசிக்-குமார், ஊராட்சி துணைத்தலைவர் நாச்சிமுத்து முன்னிலையில், பி.டி.ஓ.,க்கள் சிவகுருநாதன், முருகன் உள்ளிட்டோர் பேச்சு-வார்த்தை நடத்தினர். மாவட்ட அதிகாரிகளிடம் போனில் பேசி, முதல் கட்டமாக, 48 லட்சம் ரூபாய் நிதிக்கான நிர்வாக அனுமதி தருவதாகவும், மீதியை ஆய்வு செய்து அனுமதி தரப்படும் எனக் கூறினர். இதையடுத்து செல்வி போராட்டத்தை கைவிட்டார்.

இதனால் இரண்டு நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us