/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நம்பியூர் குமுதா பள்ளி மாணவி துப்பாக்கி சுடுதலில் அசத்தல் நம்பியூர் குமுதா பள்ளி மாணவி துப்பாக்கி சுடுதலில் அசத்தல்
நம்பியூர் குமுதா பள்ளி மாணவி துப்பாக்கி சுடுதலில் அசத்தல்
நம்பியூர் குமுதா பள்ளி மாணவி துப்பாக்கி சுடுதலில் அசத்தல்
நம்பியூர் குமுதா பள்ளி மாணவி துப்பாக்கி சுடுதலில் அசத்தல்
ADDED : ஜூலை 31, 2024 07:15 AM
ஈரோடு : தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் கழகத்தின் சார்பாக, 47வது துப்பாக்கி சுடும் போட்டி கோவையில் நடந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து, பல்வேறு மாணவ-மாணவியர் கலந்து கொண்-டனர். இதில், 14 வயது மாணவியர் தனி நபர் பிரிவில், நம்பியூர் குமுதா பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி ரிதன்யா, 400க்கு, 328 புள்ளிகள் பெற்றார். இதன் மூலம் அடுத்த மாதம் சென்னையில் நடக்-கவுள்ள தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றார்.
சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, செயலர் அரவிந்தன், இணை செயலர் டாக்டர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.