Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காய்கறிகள் விலை உயர்வு

காய்கறிகள் விலை உயர்வு

காய்கறிகள் விலை உயர்வு

காய்கறிகள் விலை உயர்வு

ADDED : ஜூலை 08, 2024 07:13 AM


Google News
ஈரோடு : ஈரோடு வ.உ.சி., மைதானம் அருகேயுள்ள தினசரி காய்கறி மார்க்-கெட்டுக்கு, இரு வாரமாக வரத்து குறைந்துள்ளது. நேற்று, 950 டன் காய்கறிகளே வரத்தானது. இதனால் அனைத்து காய்கறி-களின் விலையும் கிலோவுக்கு, 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்தது. கத்திரி, முருங்கை, பச்சை மிளகாய், கருப்பு அவரை, இஞ்சி, பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது.

ஈரோடு மார்க்கெட்டில் நேற்று காய்கறிகளின் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): கத்திரி--80, வெண்டை-50, பாகற்காய்-80, சுரைக்காய்-20, பீர்க்கன்-80, புடலை--80, முள்ளங்கி-60, முருங்கை--120, கொத்தவரை-60, பச்சை மிளகாய்-140, பட்ட அவரை--120, கருப்பு அவரை--160, கேரட்-80, பீட்ரூட்-80, பீன்ஸ்-140, உருளை-50, இஞ்சி-170, சி.வெங்காயம்-50, பெ. வெங்காயம்-50, தக்காளி-40, பூண்டு-250. முட்டைகோஸ்--60, காலிபிளவர்-50 ரூபாய்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us