ADDED : ஜூன் 10, 2025 01:11 AM
பெருந்துறை, ருந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாகவே, வெயில் தாக்கம் கடுமையாக உள்ளது. நேற்றும் வழக்கம்போல் வெயில் வாட்டியது. இந்நிலையில் மாலை, 4:30 மணிக்கு கனமழை பெய்ய தொடங்கியது. 5:00 மணி வரை அதே வேகத்தில் கொட்டி தீர்த்தது. மழையுடன் இடி-மின்னலும் இருந்தது. மழையால் தாழ்வான பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி, கல்லுாரி விடும் நேரத்தில் மழை பெய்தால், மாணவ-மாணவியர், பெற்றோர் அவதிக்கு ஆளாகினர். அரை மணி நேரம் கொட்டிய மழையால், இரவில் சூடு தணிந்து, குளிர் காற்று வீசியது.
கோபியில்...
கோபியில் நேற்று காலை முதல் வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது. மதியம், 3:45 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. கோபி பஸ் ஸ்டாண்ட், கரட்டூர், குள்ளம்பாளையம், வெள்ளாளபாளையம் பிரிவு, பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், நாதிபாளையம் உள்ளிட்ட பகுதியில் மாலை, 4:15 மணி வரை சாரலாக கொட்டி தீர்த்தது. அதன் பிறகு வானம், மேகமூட்டமாக காணப்பட்டது.