ADDED : மார் 27, 2025 02:00 AM
மதுவால் இறந்த 'மது'
சத்தியமங்கலம்:தாளவாடிமலை, கல்மண்டி புரத்தை சேர்ந்த சுந்தரம்மா மகன் மது, 26; மளிகை கடை தொழிலாளி. மதுவுக்கு அடிமையானதால் சரிவர வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்தார். நேற்று காலை மகனிடம், தாய் சுந்தரம்மா இப்படி தினமும் குடித்து விட்டு வந்தால் எப்படி? என கேட்டுள்ளார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய மது, சிறிது நேரத்தில் ஊருக்கு வெளியே குட்டைக்கு அருகில் வாயில் நுரையுடன் மயங்கி கிடந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் இறந்து விட்டது தெரிய வந்தது. பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.