ADDED : மார் 23, 2025 01:35 AM
விபத்தில் தொழிலாளி பலி
அந்தியூர்:
அந்தியூரை அடுத்த ஒலகடம் வெடிக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 40, கட்டட கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் நள்ளிரவில் பைக்கில், ஒலகடத்தில் இருந்து அம்மன்பாளையம் ரோட்டில் தாண்டாம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் சென்றார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதியதில் சம்பவ இடத்தில் இறந்தார். வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.