ADDED : மார் 14, 2025 01:42 AM
தி.மு.க., பொதுக்கூட்டம்
அந்தியூர்:இந்தி திணிப்பு மற்றும் லோக்சபா தொகுதி மறு சீரமைப்பில் வஞ்சித்து வரும், மத்திய அரசை கண்டித்து, அந்தியூர் தாலுாகா அலுவலகம் முன், தி.மு.க., சார்பில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. பேரூர் செயலாளர் காளிதாஸ்
வரவேற்றார். மாவட்ட பிரதிநிதி மயிலேறு முன்னிலை வகித்தார். அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் தலைமை வகித்தார். மாநில இலக்கிய அணி துணை செயலாளர் திராவிடமணி சிறப்பு அழைப்பாளராக பேசினார். வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், அந்தியூர் டவுன் பஞ்., தலைவர் பாண்டியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.