/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தாயின் கள்ளக்காதலன் கொலை தீர்த்துக்கட்டிய மகன் சிக்கினார் தாயின் கள்ளக்காதலன் கொலை தீர்த்துக்கட்டிய மகன் சிக்கினார்
தாயின் கள்ளக்காதலன் கொலை தீர்த்துக்கட்டிய மகன் சிக்கினார்
தாயின் கள்ளக்காதலன் கொலை தீர்த்துக்கட்டிய மகன் சிக்கினார்
தாயின் கள்ளக்காதலன் கொலை தீர்த்துக்கட்டிய மகன் சிக்கினார்
ADDED : ஜூலை 08, 2024 07:10 AM
சத்தியமங்கலம், : ஈரோடு மாவட்டம் ஆசனுார் அருகே, தொட்டபுரம் வனப்பகு-தியில் கடந்த ஜூன், 26ம் தேதி, வனத்துறை பணியாளர்கள் ரோந்து சென்றபோது, மனித எலும்புக்கூடு கிடந்தது. அவர்கள் தகவலின்படி ஆசனுார் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
தொட்டபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ரங்கசாமி மனைவி முத்துமணி, ௪௩; இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கூலி தொழி-லாளி குமார், ௪௦, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை மகன் நாகமல்லு கண்டித்தும் முத்துமணி தொடர்ந்தார்.
இந்நிலையில் மே மாதம், 27-ம் தேதி இரவு முத்துமணி, குமார் ஒன்றாக இருந்ததை நாகமல்லு பார்த்துள்ளார். இதனால் ஆத்திர-மடைந்தவர், சித்தப்பா மகன் மாதவனுடன் சேர்ந்து, கட்டையால் அடித்து குமாரை கொன்றார். பிறகு உடலை வனப்பகுதிக்குள் வீசி சென்றது விசாரணையில் தெரிந்தது. நாகமல்லு, 25, முத்து-மணி, 43, மாதவன், 24, ஆகியோரை, ஆசனுார் போலீசார் கைது செய்தனர். சத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்-தனர்.