ADDED : ஜூலை 23, 2024 01:47 AM
பவானி : வெள்ளித்திருப்பூர் அருகே சுமைதாங்கியில் இருந்து குருநாதபுரம் செல்லும் அரசுக்கு சொந்தமான சாலையை.
அப்பகுதியை சேர்ந்த தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் சங்கராப்பாளையம் பஞ்., உட்பட்ட சாலையின் ஒரு பகுதியிலும், கெட்டிசமுத்திரம் பஞ்., உட்பட்ட சாலையின் மற்றொரு பகுதியிலும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடந்தது. அந்தியூர் தாசில்தார் கவியரசு தலைமையில், இரு பகுதியிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, எல்லைக்கல் நட்-டனர்.