Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நிபந்தனை பட்டா முடக்கம் ரத்து செய்யக்கோரி மனு

நிபந்தனை பட்டா முடக்கம் ரத்து செய்யக்கோரி மனு

நிபந்தனை பட்டா முடக்கம் ரத்து செய்யக்கோரி மனு

நிபந்தனை பட்டா முடக்கம் ரத்து செய்யக்கோரி மனு

ADDED : ஜூலை 02, 2024 06:32 AM


Google News
ஈரோடு : நிபந்தனை பட்டா நிலங்களை வாங்கியவர்களின் பட்டா முடக்-கத்தை ரத்து செய்யக்கோரி, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்க-ராவிடம், முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் தலைமையில் நேற்று மனு வழங்கினர்.

பின் வெங்கடாசலம் கூறியதாவது: பெருந்துறை மருத்துவ கல்-லுாரி, சிலேட்டர் நகர் அருகே தமிழ் நகர் பகுதியில், 1922, 1940, 1942ல் கிறிஸ்தவ மதம் மாறும் ஆதிதிராவிடர்களுக்கு ஆங்கி-லேய அரசு, நிபந்தனை பட்டாவாக வழங்கியது. அந்நிலத்தை அச்சமுதாயத்தினர் தவிர, பிறருக்கு விற்கக்கூடாது. ஆனால், 30 ஆண்டுகளுக்குள் இவ்விடங்களை, 2, 3 சென்ட்களாக பல்வேறு தரப்பினர் வாங்கி வீடு கட்டி, மின் மற்றும் குடிநீர் இணைப்பு, சாலை வசதி உள்ளிட்ட அனைத்தும் பெற்றனர். எனது முயற்-சியால் இவர்களுக்கு முறையாக பட்டா பெறப்பட்டது. இந்நி-லையில் அந்த இடங்களில் ஏக்கர் கணக்கில் சிலர் நிலம் வாங்-கினர். இவர்கள் மற்றவர்களை காரணம் காட்டி பட்டா பெற்று-விட்டனர்.

சில அரசியல் காரணம், பழிவாங்கும் செயலுக்காக பட்டாவை ரத்து செய்ய முயன்று கடந்த, 2020 செப்., மாதம் அப்போதைய கலெக்டர், குறைந்த நிலம், அதிக நிலம் என வாங்கிய அனைவ-ரது பட்டாவையும் ரத்து செய்து விட்டார். இதனால் அங்கு வீடு கட்டி, 30 ஆண்டாக வசிப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த உத்தரவை ரத்து செய்து, பட்டா கிடைக்க வழி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us