/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டூவீலர் மீது மோதிய மொபட் அண்ணன் பலி; தங்கை சீரியஸ் டூவீலர் மீது மோதிய மொபட் அண்ணன் பலி; தங்கை சீரியஸ்
டூவீலர் மீது மோதிய மொபட் அண்ணன் பலி; தங்கை சீரியஸ்
டூவீலர் மீது மோதிய மொபட் அண்ணன் பலி; தங்கை சீரியஸ்
டூவீலர் மீது மோதிய மொபட் அண்ணன் பலி; தங்கை சீரியஸ்
ADDED : ஜூலை 20, 2024 07:19 AM
சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அருகே ராமபையலுாரை சேர்ந்த விவசாயி பார்த்திபன், 26; இவரின் தங்கை சண்மதி. ஆடிட்டரான இவர் திருப்பூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். வேலை முடிந்து நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பஸ்சில் சத்திய-மங்கலம் வந்தார்.
அங்கிருந்து டூவீலரில் பார்த்திபன் அழைத்துக் கொண்டு வீட்-டுக்கு சென்றார். உதயமரத்துமேடு பகுதியில் தனியார் பள்ளி அருகில் சென்றபோது, எதிரே வந்த ஹோண்டா ஆக்டிவா மொபட், பைக் மீது மோதியது. இதில் அண்ணன், தங்கை பலத்த காயமடைந்தனர்.
மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், செல்லும் வழியில் பார்த்-திபன் இறந்து விட்டார். சண்மதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு-கிறது. சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.