/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விசைத்தறியாளர் பிரச்னை; கலெக்டரிடம் மனு விசைத்தறியாளர் பிரச்னை; கலெக்டரிடம் மனு
விசைத்தறியாளர் பிரச்னை; கலெக்டரிடம் மனு
விசைத்தறியாளர் பிரச்னை; கலெக்டரிடம் மனு
விசைத்தறியாளர் பிரச்னை; கலெக்டரிடம் மனு
ADDED : மார் 28, 2025 01:02 AM
விசைத்தறியாளர் பிரச்னை; கலெக்டரிடம் மனு
திருப்பூர்:தமிழ்நாடு மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு மாநில தலைவர் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் திருப்பூர் கலெக்டரிடம் மனு அளித்த பின் கூறியதாவது:
தமிழகத்தில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தான், அதிகளவு ஓ.இ., ஸ்பின்னிங் மில்கள், விசைத்தறி, ஆட்டோலுாம், ஆயத்த ஆடை நிறுவனங்கள், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் உள்ளன.
காடா உற்பத்தியில் ஈடுபட்டு வரும், கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் இடையே மட்டும், கடந்த கால் நுாற்றாண்டாகவே அரசு தலையிட்டு சமரசம் பேசும் நிலை தொடர்கிறது. நிரந்தர தீர்வு ஏற்படாததால், கடந்த, 2014ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் கிடைக்கவில்லை.
கடந்த, 2022ல், ஒப்பந்தம் செயல்படுத்தப்படவே இல்லை. தற்போது செலவினங்கள் உயர்வால், புதிய கட்டண ஒப்பந்தம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இப்பகுதிக்கு நுால் விற்பனை செய்து வந்த நுாற்பாலைகள், கடும் இன்னல், பொருளாதார நஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் மட்டும், தினமும், 30 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 50 கோடி ரூபாய்க்கும் மேல், நுால் இருப்பில் உள்ளது. கோவை, திருப்பூர் மட்டுமின்றி பிற பகுதிகளிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கிறது. நுாற்பாலை தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
ஸ்டிரரைக் முடியும் வரை, மின் கட்டணம் உள்ளிட்ட கட்டணம் செலுத்த விலக்கு அளிக்க வேண்டும், வங்கிக்கடன் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும். விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு, இடையே சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு கூறினர்.