/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சொத்து வரியை குறைக்க கோரி மாநகராட்சி கமிஷனரிடம் மனு சொத்து வரியை குறைக்க கோரி மாநகராட்சி கமிஷனரிடம் மனு
சொத்து வரியை குறைக்க கோரி மாநகராட்சி கமிஷனரிடம் மனு
சொத்து வரியை குறைக்க கோரி மாநகராட்சி கமிஷனரிடம் மனு
சொத்து வரியை குறைக்க கோரி மாநகராட்சி கமிஷனரிடம் மனு
ADDED : ஜூலை 24, 2024 08:14 AM
ஈரோடு, : மாநகராட்சி அறிவித்துள்ள சொத்து வரியை குறைக்க வலியு-றுத்தி, மாநகராட்சி மைய அலுவலகத்தில், அன்னை சத்யா நகர் குடியிருப்போர் சங்கம் மற்றும் கொல்லம்பாளையம் எம்.ஜி.ஆர்., விழிச்சுடர் குடியிருப்போர் சங்கத்தினர், நேற்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் ஆணையாளர் மணீஷிடம், சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய, அன்னை சத்யா நகர் அடுக்குமாடி குடியிருப்பு, கொல்லம்பாளையம் எம்.ஜி.ஆர்., அடுக்குமாடி விழிச்சுடர் குடியிருப்பு மற்றும் இதர குடியிருப்புக-ளுக்கு, மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரி விதித்துள்ளது. கடந்த வரி விதிப்பை விட பல மடங்கு கூடுதலாக, ஒரே அளவுள்ள குடி-யிருப்புகளுக்கு முரண்பாடாகவும் உள்ளது. எனவே வரி விதிப்பை குறைக்க வேண்டும்.
வேறுபாடான வரி விதிப்பை ஒழுங்குப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்-ளனர். இதுகுறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மனு கொடுத்த மக்களிடம், கமிஷனர் மணீஷ் உறுதிய-ளித்தார்.