/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தப்பிய கைதியை பிடிக்க முடியாமல் திணறல் தப்பிய கைதியை பிடிக்க முடியாமல் திணறல்
தப்பிய கைதியை பிடிக்க முடியாமல் திணறல்
தப்பிய கைதியை பிடிக்க முடியாமல் திணறல்
தப்பிய கைதியை பிடிக்க முடியாமல் திணறல்
ADDED : மார் 28, 2025 01:05 AM
தப்பிய கைதியை பிடிக்க முடியாமல் திணறல்
ஈரோடு:ஈரோடு அடுத்த வாய்க்கால் மேடு பகுதியில் தனியார் மொபைல் போன் டவரில் கடந்த, 25ல் அலாரம் தொடர்ந்து அடித்தது. டவர் கண்காணிப்பாளரான வெங்கடாசலம் தனது குழுவினருடன் அங்கு சென்றபோது, மர்ம ஆசாமி ஒருவர் டவர் கேபிள் ஒயர்களை துண்டித்து திருடி கொண்டிருந்தார். அவரை கையும், களவுமாக பிடித்து வெள்ளோடு போலீசில்
ஒப்படைத்தனர். விசாரணையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு, ரிங் ரோடு பகுதியை சேர்ந்த ரூபிகான், 35, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ஈரோட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடந்த, 26ல் ரூபிகானை பெருந்துறை கிளை சிறையில் அடைக்க, வெள்ளோடு ஸ்டேஷன் ஏட்டுகள் இருவர் அழைத்து சென்றனர். பெருந்துறையில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டபோது போலீசார் பிடியில் இருந்து தப்பி
ஓடிவிட்டார். இரண்டாம் நாளாக நேற்றும் தேடுதல் வேட்டை நடந்தது. எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். அதேசமயம் ரூபிகான் போட்டோவை பிற மாவட்ட போலீசாருக்கும் அனுப்பி
வைத்துள்ளனர்.