கிணற்றில் காருடன் பாய்ந்த விவசாயி
கிணற்றில் காருடன் பாய்ந்த விவசாயி
கிணற்றில் காருடன் பாய்ந்த விவசாயி
ADDED : மார் 14, 2025 01:39 AM
கிணற்றில் காருடன் பாய்ந்த விவசாயி
சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதுார் அருகே முள்ளிக்காபாளையத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார், 42; தனது தோட்டத்தில் இருந்த காரை பின்பக்கமாக எடுத்தபோது நிலை தடுமாறி அருகிலிருந்த, 50 அடி கிணற்றில் கார் பாய்ந்தது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சத்தி தீயணைப்பு துறையினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்த சிவக்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.