/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அவிநாசி கோவிலில் லிங்க திருமேனியில் சூரிய ஒளி அவிநாசி கோவிலில் லிங்க திருமேனியில் சூரிய ஒளி
அவிநாசி கோவிலில் லிங்க திருமேனியில் சூரிய ஒளி
அவிநாசி கோவிலில் லிங்க திருமேனியில் சூரிய ஒளி
அவிநாசி கோவிலில் லிங்க திருமேனியில் சூரிய ஒளி
ADDED : மார் 14, 2025 01:38 AM
அவிநாசி கோவிலில் லிங்க திருமேனியில் சூரிய ஒளி
அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படர்ந்த அற்புதத்தை, பக்தர்கள் வணங்கி மெய்யுருகினர்.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், சுந்தரமூர்த்தி நாயனாரால், முதலையுண்ட பாலகனை மீட்டு, தேவார பதிகம் பாடப்பெற்ற திருத்தலமுமாக விளங்கும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் ஐந்து நாட்கள், லிங்கத்திருமேனி மீது சூரிய ஒளி விழும் அற்புதம் நடக்கும். அவ்வகையில், நேற்று சூரிய ஒளி, லிங்கத்திருமேனி மீது விழுந்தது. இதனை பார்த்து, சிவனடியார்கள், பக்தர்கள் பரவசமடைந்து எம்பெருமானை வழிபட்டனர்.
கோவில் சிவாச்சார்யார்கள் கூறியதாவது:ஆண்டுதோறும் உத்ராயண காலத்தில் மாசி மாதத்தில் அவிநாசி லிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் அற்புதம் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு நேற்று காலை 6:43 மணியளவில் சூரிய கதிர்கள் பிரதான ராஜகோபுரம் வழியாக ஊடுருவி, கொடிமரம், பீடஸ்தம்பம் என பரவி, லிங்கேஸ்வரர் மீது விழுந்தது. அப்போது, மூலவர் தங்க நிறத்தில் ஜொலித்தார். அந்த நேரத்தில், இறைவனிடத்தில் வேண்டும் பிரார்த்தனை நிறைவேறும் என்பது ஐதீகம். இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக, சிவனடியார் திருக்கூட்டத்தினர், சூரிய ஒளி படர்ந்த போது அவிநாசி பதிகம் பாராயணம் செய்து அவிநாசியப்பரை வழிபட்டனர்.