ADDED : பிப் 11, 2024 01:15 AM
திண்டுக்கல்: முன்னாள் குடியரசு தலைவரும் , இந்திய தேசிய காங்., கட்சி முன்னாள் தலைவருமான ஜாகீர் உசேன் பிறந்த நாள் விழா பிள்ளையார் நத்தம் பேகம்சாஹிபா நகரிலுள்ள ஜாகீர் உசேன் நினைவு சிறுபான்மையினர் மேல்நிலை, துவக்கப்பள்ளிகளில் நடந்தது.
மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் முன்னாள் பள்ளி தாளாளர் அப்துல் முத்தலீப், பேகம்சாஹிபாநகர் தொடக்க பள்ளி விழாவில் தலைமை ஆசிரியை பாத்திமாமேரி, அசனாத்புரம் தொடக்கப்பள்ளி விழாவில் தலைமை ஆசிரியை அம்பிகாதேவி தலைமை வகித்தனர். தமிழாசிரியை மோட்சம் முன்னிலை வகித்தார். மாணவர்களின் அணிவகுப்பிற்கு பின் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.