/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநி போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி பழநி போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
பழநி போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
பழநி போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
பழநி போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
ADDED : செப் 20, 2025 04:31 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் வீடு சுவர் கட்டுவதில் பக்கத்து வீட்டார் இடையூறு செய்ததாக கூறி தொழிலாளி ஒருவர் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றார்.
பழநி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி தண்டபாணி 49.
இவரது வீட்டிற்கு அருகே உள்ள வீட்டில் சில நாட்களுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர்.
அப்போது தண்டபாணி வீட்டின் சுவர் சேதமடைந்துள்ளது.
இதையடுத்து தண்டபாணி சுவரை கட்ட கட்டுமான பணிகளை துவங்கினார். அப்போது இவருக்கும் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. பழநி டவுன் போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து தண்டபாணி, மனைவி பிரியா 35, தங்கை பஞ்சவர்ணம் 30, ஆகியோருடன் நேற்று டவுன் ஸ்டேஷன் வந்தார். கையில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி அவர்கள் தீக்குளிக்க முயன்றனர்.
டி.எஸ்.பி., தனஞ்செயன் முன்னிலையில் சம்பவம் நடந்த நிலையில் எஸ்.ஐ., சந்திரன், போலீசார் பெட்ரோல் பாட்டிலை பறித்து தடுத்தனர்.
தண்டபாணி கூறுகையில், அருகில் உள்ளவர்கள் போர் போடும் போது எங்கள் வீட்டு சுவர் இடிந்தது. சுவரை கட்டும்போது பிரச்னை ஏற்பட்டது. போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றோம்,'' என்றார்.