/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
ADDED : ஜூன் 10, 2025 01:54 AM

திண்டுக்கல்: நிலத்தை மீட்டுத்தரக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
குறைதீர் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்த திருச்சி காந்திநகரை சேர்ந்த வனராணி 36, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.வனராணி கூறுகையில், ''எனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம் கொடைக்கானல் பள்ளங்கி கோம்பையில் உள்ளது.
இதை உள்ளூர் தி.மு.க., பிரமுகர்களான தங்கப்பாண்டி, தங்கதுரை, இந்திராணி ஆகியோர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி உள்ளனர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்தும் நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தியும் எனது தந்தை காலம் முதல் தொடர்ந்து 23 ஆண்டாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்.
ஆனால் இன்றுவரை எனக்கு தீர்வு இல்லை. இந்நிலையில் எனக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையால் உயிருக்கு பயந்து திருச்சியில் வசிக்கிறேன். எனது மனு மீது நியாயமான நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தரவேண்டும். இல்லையேல் இதே இடத்தில் குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக்கொள்வேன்''என்றார்.