ADDED : ஜூன் 10, 2025 01:53 AM
குஜிலியம்பாறை: திருக்கூர்ணம் ஊராட்சியில் 22 கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள திருக்கூர்ணம், துலுக்கம்பாறை, நத்தமேட்டுப்பட்டி, சீத்தப்பட்டி உள்ளிட்ட 6 கிராமங்களில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில், தற்போது சேதமடைந்துள்ளது.
மேல்நிலைத் தொட்டியின் உட்புறம், மேற்பகுதி. நான்கு துாண்கள் என அனைத்தும் சேதம் அடைந்த நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி இத்தொட்டிகளை அகற்றிவிட்டு மீண்டும் புதிய குடிநீர் தொட்டிகளை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.