ADDED : மே 23, 2025 04:21 AM
பழநி: இந்திய அஞ்சல் துறை சார்பில் 2024--25 ல் கடிதம் எழுதும் போட்டி நடைபெற்றது. இந்திய அளவில் நடைபெற்ற இப்போட்டி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்டது.
மாநில அளவில் இரண்டாம் இடத்தில் பழநி அக்ஷயா அகாடமி பள்ளி மாணவி தரணிஸ்ரீ வெற்றி பெற்றார். பழநி தலைமை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவன் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.