/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஏன் இந்த சுணக்கம்: ஆமை வேகத்தில் நடக்கும் ஜல்ஜீவன் குடிநீர் திட்டங்கள் ஏன் இந்த சுணக்கம்: ஆமை வேகத்தில் நடக்கும் ஜல்ஜீவன் குடிநீர் திட்டங்கள்
ஏன் இந்த சுணக்கம்: ஆமை வேகத்தில் நடக்கும் ஜல்ஜீவன் குடிநீர் திட்டங்கள்
ஏன் இந்த சுணக்கம்: ஆமை வேகத்தில் நடக்கும் ஜல்ஜீவன் குடிநீர் திட்டங்கள்
ஏன் இந்த சுணக்கம்: ஆமை வேகத்தில் நடக்கும் ஜல்ஜீவன் குடிநீர் திட்டங்கள்
ADDED : ஜூன் 19, 2025 03:00 AM

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் குடிநீர் திட்ட பணிகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டு கொள்ளாமல் உள்ளதால் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கும் நிலையில் இதன் திட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, சின்னாளப்பட்டி, சித்தையன் கோட்டை, தாடிக்கொம்பு உள்ளிட்ட பேரூராட்சிகள் ,ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மத்திய அரசின் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் மிஷின் திட்டம் ஒரு ஆண்டு கடந்தும் பணி நிறைவடையாமல் உள்ளது. பேரூராட்சி நிர்வாகங்கள் ,நகராட்சி நிர்வாகம் இதை கண்டு கொள்வதே இல்லை. தெருக்கள் முழுவதும் இதற்காக பள்ளம் தோண்டி மேடு பள்ளங்களாக மூடப்பட்டு பொதுமக்கள் நடக்கவே சிரமமாக உள்ளது. இதோடு மக்களுக்கான குடிநீரும் கிடைக்கபெறாமல் பாதிப்பும் தொடர்கிறது .நல்லதொரு திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும் .
சீராக்க வேண்டும்
ஜல்ஜீவன் திட்டத்திற்காக வீதிகள் முழுவதும் பள்ளங்கள் தோண்டப்பட்டு மேடு பள்ளங்களாக உள்ளது. திட்டத்தை விரைவில் முடித்து தெருக்களை மேடு பள்ளங்கள் இன்றி சீராக்க வேண்டும்.
ராஜா, முன்னாள் ஊராட்சி தலைவர், எத்திலோடு .