ADDED : ஜூன் 19, 2025 02:59 AM
திண்டுக்கல்: வேளாண் இணை இயக்குநர் பாண்டியன் கூறியதாவது : மாவட்டத்தில் ஆண்டுதோறும் 75 ஆயிரம் எக்டடேரில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
சத்து மிகுந்த சோளம் வறட்சியை தாங்கி குறைந்த அளவு நீரில் வளரக்கூடிய பயிர். இதன் தட்டை கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக அமைகிறது. இதன் சான்று விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூ.30 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 29 எக்டரேில் சோளம் விதை பண்ணை அமைக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. விதைப் பண்ணைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என்றார்.