/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்; அமைச்சர் பெரியசாமி 200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்; அமைச்சர் பெரியசாமி
200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்; அமைச்சர் பெரியசாமி
200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்; அமைச்சர் பெரியசாமி
200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்; அமைச்சர் பெரியசாமி
ADDED : ஜூன் 18, 2025 04:30 AM

திண்டுக்கல்: ''2026 தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என முதல்வர் கேட்டுள்ளார். அவர் கேட்டதை விட அதிகமாகவே கொடுக்க வேண்டுமென'' அமைச்சர் பெரியசாமி பேசினார்.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நடந்த விரிவான மினி பஸ் திட்ட தொடக்க விழாவில் அவர் பேசியதாவது : புதிய , நீட்டிக்கப்பட்டவகையில் 29 வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் மினிபஸ் சேவையை விரிவுப்படுத்தும் வகையில் 12 கி.மீட்டர் தொலைவு என்பதை 25 கி.மீட்டராக விரிவுப்படுத்தி உள்ளார். 10 ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சி துருதிர்ஷ்டமானது. அந்தநிலை மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என முதல்வர் கேட்டுள்ளார். அவர் கேட்டதை விட அதிகமாகவே கொடுக்க வேண்டும் என்றார்.
கலெக்டர் சரணவன் தலைமை வகித்தார். எம்.பி., க்கள் சச்சிதானந்தம், ஜோதிமணி, எம்.எல்.ஏ.,க் கள் செந்தில்குமார், காந்திராஜன் முன்னிலை வகித்தனர். மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், மண்டல போக்குவரத்து அலுவலர் சத்யநாராயணன் கலந்து கொண்டனர்.