/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காத்து வாங்குது : உதவி மையங்களில் இல்லை போலீஸ்: காவல் துறை அலட்சியத்தால் அவலம் காத்து வாங்குது : உதவி மையங்களில் இல்லை போலீஸ்: காவல் துறை அலட்சியத்தால் அவலம்
காத்து வாங்குது : உதவி மையங்களில் இல்லை போலீஸ்: காவல் துறை அலட்சியத்தால் அவலம்
காத்து வாங்குது : உதவி மையங்களில் இல்லை போலீஸ்: காவல் துறை அலட்சியத்தால் அவலம்
காத்து வாங்குது : உதவி மையங்களில் இல்லை போலீஸ்: காவல் துறை அலட்சியத்தால் அவலம்
ADDED : ஜூன் 10, 2025 01:47 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான காவல் உதவி மையங்களில் போலீசார் இருப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. மாவட்ட காவல் துறையும் இதில் அலட்சியம் காட்டுவதால் மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது .
மாவட்டத்தை பொறுத்தவரையில் நிலுவை வழக்குகள், குற்ற வழக்குகள், போக்சோ போன்றவற்றில் மாவட்ட போலீசார் தீவிரமாக ஈடுபட்டு குற்றவாளிகளை கண்டறிகின்றனர். ஆனால் திருட்டு, அலைபேசி, நகை பறிப்பு, வழிப்பறி போன்றவை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கின்றன. இதற்கு அங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் காவல் உதவி மையங்களில் போலீசார் இல்லாததும் ஒரு காரணம் என கூறலாம். இந்த மையங்களில் போலீசார் இருந்தால் குற்றவாளிகளை விரைவாக பிடிக்கவும் முடியும், குற்றத்தில் ஈடுபட முயற்சிப்போரும் அஞ்சுவர். அதே நேரத்தில் எதிர்பாராத விபத்துகள், பிரச்னைகள், போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை முன்னரே அறிந்து தடுக்கலாம். மாவட்டத்தில் 35 க்கு மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஸ்டேஷனுக்கு ஒன்று ,அதற்கு மேற்பட்ட காவல் உதவி மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மையங்களில் போலீசார் இருப்பதில்லை. இதனால் பொதுமக்கள் சிறு விஷயத்திற்கு கூட ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இங்கு போலீசார் இல்லாதால் இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகலிலே திருட்டு, வழிப்பறிகள் நடக்கின்றன.நகர்பகுதிக்கு வெளியில் உள்ள மக்கள் போலீசாரை எளிதில் அணுகவும் முடியவில்லை. நெடுஞ்சாலைகளில் உள்ள மையங்களில் போலீசார் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் இல்லாததால் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மணல் திருட்டு, திருட்டு வாகனங்கள் எளிதாக தப்பி செல்கின்றன. இதோடு எந்த மையங்களும் முறையாக பராமரிக்கப்படுவதும் இல்லை. போலீசார் பற்றாக்குறை ஒரு காரணமாக கூறப்பட்டாலும் பொதுமக்களின் நலன் கருதி மையத்திற்கு ஒருவராவது இருக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
........ பாதுகாப்பில் கேள்விக்குறிநாள்தோறும் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வழிப்பறி, செயின் பறிப்பு, குற்ற சம்பவங்கள் போன்றவற்றால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. போலீசார் இருப்பை உறுதி செய்தாலே குற்றம் செய்ய வேண்டுமென நினைப்போருக்கு அச்சம் ஏற்படும். அவசர உதவிக்கு பொதுமக்கள் போலீசாரை அணுக இது போன்ற காவல் உதவி மையங்களில் ஆட்கள் இருந்து கொண்டே இருப்பது அவசியம். தற்போது பீட் போலீசார் கூட ரொந்து வருவதில்லை. இதனால் குற்றவாளிகள் துணிவுடன் நடமாடுகின்றனர். உரிய நடவடிக்கைக்கு மாவட்ட போலீசார் முன்வர வேண்டும்- தனபாலன், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் , திண்டுக்கல். ..........