/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வத்தலக்குண்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வத்தலக்குண்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
வத்தலக்குண்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
வத்தலக்குண்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
வத்தலக்குண்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
ADDED : ஜூன் 10, 2025 01:48 AM

வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டில் டூ வீலர் மோதியதில் ஏற்பட்ட தகராறை சமரசம் செய்த தி.மு.க., நிர்வாகி வீடு உட்பட இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
வத்தலக்குண்டு கன்னிமார் கோவில்பட்டியை சேர்ந்த செல்லத்துரைக்கும் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த தினேஷிற்கும் டூவீலர் மோதி கொண்டதில் தகராறு ஏற்பட்டது.
இதை தி.மு.க., ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கண்ணன் சமரசம் செய்துள்ளார்.இதன் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவில் கண்ணன் வீட்டருகே பயங்கர வெடி சத்தம் கேட்டது.
வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த அவர் வெளியே வந்து பார்த்தபோது இளைஞர் ஒருவர் அதே பகுதியில் மேலும் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் கொண்டு வீசியதை கண்டார். இளைஞரை அப்பகுதி மக்கள் பிடித்த போது கத்தியால் தன்னைத்தானே வெட்டிக்கொண்டார்.
வத்தலக்குண்டு போலீசார் விசாரணையில், டூவீலர் மோதிய தகராறில் சமரசம் செய்த கண்ணனை பழிவாங்க பாதிக்கப்பட்டவர் துாண்டுதலில் கலைஞர் காலனியை சேர்ந்த மணிபாண்டி 26, பெட்ரோல் குண்டு வீசியது தெரியவர அவரை கைது செய்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களில் வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் விக்டோரியா மேரி ஆய்வு செய்தார்.