ADDED : ஜூன் 02, 2025 12:49 AM
நிலக்கோட்டை,: விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் போதுராசன் தலைமையில் நடந்தது.
திண்டுக்கல் மைய மாவட்ட செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார். விடுதலைச் சிறுத்தை மேலிட பொறுப்பாளர்கள் தமிழ்வாணன், ஜான் கிறிஸ்டோபர், வழக்கறிஞர் மணிகண்டன், கனி மனோகரன் பேசினர். திருச்சியில் நடக்கும்ஊர்வலத்திற்கு கிராமங்கள் தோறும் முகாமிட்டு பொதுமக்களை திரட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட பொறுப்பாளர்கள் ஜான் கென்னடி, காளிமுத்து, முருகன், சுதந்திரம், ராமகிருஷ்ணன், சில்லாரி கலந்து கொண்டனர்.


