Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வைகாசி விசாக விழா பழநியில் துவக்கம்

வைகாசி விசாக விழா பழநியில் துவக்கம்

வைகாசி விசாக விழா பழநியில் துவக்கம்

வைகாசி விசாக விழா பழநியில் துவக்கம்

ADDED : ஜூன் 04, 2025 01:33 AM


Google News
Latest Tamil News
பழநி:பழநி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

பழநி கிழக்கு ரதவீதியில் உள்ள இக்கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி எழுந்தருள கொடிக்கம்பத்திற்கும், கொடிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து காலை 11:05 மணிக்கு கொடியேற்றப்பட்டது.

தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 8 இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம், ஜூன் 9 மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது . ஜூன் 12 திருஊடல் நிகழ்ச்சி, இரவு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவடைகிறது .





      Our Apps Available On




      Dinamalar

      Follow us