/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நத்தம் கைலாசநாதர் கோயிலில் வைகாசி விழா தேரோட்டம்- நத்தம் கைலாசநாதர் கோயிலில் வைகாசி விழா தேரோட்டம்-
நத்தம் கைலாசநாதர் கோயிலில் வைகாசி விழா தேரோட்டம்-
நத்தம் கைலாசநாதர் கோயிலில் வைகாசி விழா தேரோட்டம்-
நத்தம் கைலாசநாதர் கோயிலில் வைகாசி விழா தேரோட்டம்-
ADDED : ஜூன் 09, 2025 02:39 AM

நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
-கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோயில் வைகாசி விழா மே 31ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை,மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம் கைலாசநாதர் - சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் நேற்று காலை தொடங்கியது.
தேரில் கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன், பரிவார தெய்வங்கள் எழுந்தருள கோவில்பட்டி, அக்ரஹாரம் வழியாக கோயிலை வந்தடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடங்களை பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
மூலவர் ,சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது. இன்று பூப்பல்லக்கு , மறுநாள் உற்ஸவ சாந்தி விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.