/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ களத்துப்பட்டி கோயில் கும்பாபிஷேகம் களத்துப்பட்டி கோயில் கும்பாபிஷேகம்
களத்துப்பட்டி கோயில் கும்பாபிஷேகம்
களத்துப்பட்டி கோயில் கும்பாபிஷேகம்
களத்துப்பட்டி கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 09, 2025 02:40 AM

செந்துறை:களத்துப்பட்டி சக்திவிநாயகர்,யாள பகவதியம்மன், ஸ்ரீமலையாளகருப்பசுவாமி, ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயில்களில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் அலங்கரிக்கப்பட்ட யாகசாலையில் லெட்சுமி ஹோமம், மஹாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் வாஸ்துசாந்தி, தேவதானுஞ்கை,வேத பாராயணம ,முதல் காலயாக பூஜைகள் நடந்தது.
நேற்று இரண்டாம், மூன்றாம்,நான்காம் கால யாகசாலை பூஜை தொடர்ந்து பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாள இசையுடன் புனித நீர் கலசத்தில் ஊற்ற கும்பாபிேஷகம் நடந்தது.அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் ஒன்றிய தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா கலந்து கொண்டனர்.