/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பயனில்லா கழிப்பறை; புதர் மண்டிய சாக்கடைகள் சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு மக்கள் பயனில்லா கழிப்பறை; புதர் மண்டிய சாக்கடைகள் சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு மக்கள்
பயனில்லா கழிப்பறை; புதர் மண்டிய சாக்கடைகள் சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு மக்கள்
பயனில்லா கழிப்பறை; புதர் மண்டிய சாக்கடைகள் சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு மக்கள்
பயனில்லா கழிப்பறை; புதர் மண்டிய சாக்கடைகள் சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு மக்கள்

கொசு தொல்லை அதிகம்
ஜெயக்குமார், பா.ஜ., சக்தி கேந்திர பொறுப்பாளர், ஒட்டன்சத்திரம்: நாகணம்பட்டி பைபாஸ் ரோட்டில் சேதமடைந்த இடங்களை சீர் செய்து ஆபத்து இல்லாத பயணத்திற்கு உதவ வேண்டும். கொசு மருந்து அடிக்காமல் இருப்பதால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. நகராட்சி குடிநீர் சரியாக வருவதில்லை. சுகாதார பணியாளர்கள் குப்பை வாங்க வருவதில்லை. இதனால் பொதுமக்கள் பள்ளி அருகே ரோட்டில் குப்பையை கொட்டி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
பயன்படுத்தாத சுகாதார வளாகம்
விஜய ரமனேஸ்வரன், வழக்கறிஞர், ஒட்டன்சத்திரம் : நாகணம்பட்டி சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் இன்னும் சரி வர பயன்படுத்தவில்லை. திறந்தவெளி பயன்பாட்டை போக்க கழிப்பறையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டுக்குள் உள்ள குறுகிய சாக்கடைகளில் கழிவு நீர் தேங்காமல் இருக்க அவற்றை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாக்கடை தினமும் சுத்தம்
அருள்மணி, கவுன்சிலர் (தி.மு.க.,): நாகணம்பட்டியில் உள்ள கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்வதில்லை. முறையாக பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதை துாய்மையாக வைத்துக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். குப்பை தினமும் வாங்கப்படுகிறது. கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. ரோட்டின் கீழ் உள்ள தண்ணீர் செல்லும் பாதையை பெரிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.