/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தி.மு.க.,வை புறக்கணிக்க மக்கள் தயார் சொல்கிறார் மத்திய இணை அமைச்சர் முருகன்தி.மு.க.,வை புறக்கணிக்க மக்கள் தயார் சொல்கிறார் மத்திய இணை அமைச்சர் முருகன்
தி.மு.க.,வை புறக்கணிக்க மக்கள் தயார் சொல்கிறார் மத்திய இணை அமைச்சர் முருகன்
தி.மு.க.,வை புறக்கணிக்க மக்கள் தயார் சொல்கிறார் மத்திய இணை அமைச்சர் முருகன்
தி.மு.க.,வை புறக்கணிக்க மக்கள் தயார் சொல்கிறார் மத்திய இணை அமைச்சர் முருகன்
ADDED : பிப் 24, 2024 02:10 AM

பழநி:''தி.மு.க.,வை புறக்கணிக்க மக்கள் தயாராகி கொண்டிருக்கிறார்கள்,'' என, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
முருகன் கோயிலில் தரிசனம் செய்த பின் கூறியதாவது:
பா.ஜ., மாநில தலைவர்அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையை மத்திய அமைச்சர் அமித்ஷா துவங்கி வைத்தார். தமிழகத்தில் இந்த யாத்திரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி தி.மு.க.,வின் இயலாமையை, ஊழல் ஆட்சியை மக்களிடத்தில் எடுத்துச் செல்லும்விதம் நடந்தது. யாத்திரை நிறைவு விழா பிப்., 27 கோவை மாவட்டம் பல்லடத்தில் நடக்கிறது. பிரதமர் மோடி இதில் பங்கேற்கிறார்.
தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரை நிறைவு பெற்ற பின் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு சென்றார்கள். அதேபோல் இந்த யாத்திரையின் தாக்கத்தால் தமிழகம், புதுச்சேரியில் இருந்து 40 எம்.பி.,க்கள் லோக்சபாவுக்கு செல்வர். அதற்கான உத்தரவாதத்தை 'என் மண் என் மக்கள் யாத்திரை' வழங்கியிருக்கிறது.
பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் பல நன்மைகளை செய்துள்ளார்கள். பா.ஜ., தேசிய கட்சி. தேசிய தலைமை, பாரளுமன்றம் குழு இருக்கிறது. அந்த குழு முறையாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களை அறிவிப்பார்கள்.
தற்போது மக்கள் தி.மு.க.,வை புறக்கணிக்க தயாராகி கொண்டிருக்கிறார்கள். மக்கள், மிகப்பெரிய வெறுப்பை தி.மு.க., மீது வைத்திருக்கிறார்கள். தி.மு.க.,ஆட்சியில் விலைவாசி உயர்வு, தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றவில்லை.
மின் கட்டணம், சொத்து வரி உயர்வு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுஉள்ளனர் என்றார்.