ADDED : செப் 07, 2025 03:25 AM
திண்டுக்கல்: மதுரை மண்டல மதுவிலக்கு சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் மணிகுமார் தலைமையில் எஸ்.ஐ., சின்னமந்தையன், ஏட்டுகள் சதீஷ்குமார்,
மணிகண்டன் ஆகியோர் திண்டுக்கல் பழநி ரோட்டில் சோதனை மேற்கொண்டனர். அண்ணாமலை மில் காலனி விஜயராகவன் 45, பூபதி 45, ஆகியோரை கைது செய்தனர். பதுக்கி வைத்திருந்த 329 மதுபாட்டில்கள், 456 பீர் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.