Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ' லிங்'கை தொட்டாலே மாயமாகிறது பணம் ஏமாறுகிறார்கள்: அதிகரிக்கும் ஆன்லைன் மோசடியால் அவதி

' லிங்'கை தொட்டாலே மாயமாகிறது பணம் ஏமாறுகிறார்கள்: அதிகரிக்கும் ஆன்லைன் மோசடியால் அவதி

' லிங்'கை தொட்டாலே மாயமாகிறது பணம் ஏமாறுகிறார்கள்: அதிகரிக்கும் ஆன்லைன் மோசடியால் அவதி

' லிங்'கை தொட்டாலே மாயமாகிறது பணம் ஏமாறுகிறார்கள்: அதிகரிக்கும் ஆன்லைன் மோசடியால் அவதி

ADDED : செப் 07, 2025 03:24 AM


Google News
Latest Tamil News
மாவட்டத்தில் பல்வேறு சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்திகள் மூலம் 'லிங்' அனுப்பப்பட்டு அதன் மூலம் அலைபேசியை முடக்கி வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் மோசடி வேலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு வினாடியில் அலைபேசியில் உள்ள தகவல்கள்,வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தையும் மோசடி கும்பல் அபகரிக்கிறது.

இதில் பி.எம் கிஷான் என்ற பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கு பணம் வழங்கும் பெயரில் லிங் உலா வருவதால் விவசாயிகள் பெருமளவில் ஏமாறுகின்றனர்.

இதில் பல லட்சம் பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. உடனடியாக புகார் அளித்த போதிலும் இழந்த பணத்தை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.

போலீசார் இதற்கு 1930 என்ற அலைபேசி , திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

எனினும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்கள் விவசாயிகள் பெரும் பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

இதனை கட்டுப்படுத்த போலீசார் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us