/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தொல்லை தந்த உறவினரை கொன்று புதைத்த திருநங்கை தொல்லை தந்த உறவினரை கொன்று புதைத்த திருநங்கை
தொல்லை தந்த உறவினரை கொன்று புதைத்த திருநங்கை
தொல்லை தந்த உறவினரை கொன்று புதைத்த திருநங்கை
தொல்லை தந்த உறவினரை கொன்று புதைத்த திருநங்கை
ADDED : மே 10, 2025 01:29 AM

நெய்க்காரப்பட்டி:திண்டுக்கல் மாவட்டம், பழனி நெய்க்காரப்பட்டி அருகே வேலாயுதம்பாளையம் புதுாரை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி முத்துசாமி, 31. இவரது மனைவி மாரியம்மாள்.
இவர்கள், உறவினரான திருநங்கை வைதேகி, 40, என்பவருடன் சித்தரேவு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். மாரியம்மாள், கணவர் மாயமானதாக மே 2ல் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில், அவர்கள் வீட்டின் முன் மண் குவியலுடன் எம் சாண்ட் கொட்டப்பட்டு இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. மே 7ல் தாசில்தார் பிரசன்னா, டி.எஸ்.பி., தனஞ்செயன் முன்னிலையில் அப்பகுதியை தோண்டியதில் முத்துசாமியின் உடல் கிடைத்தது.
முத்துசாமி பாலியல் தொல்லை கொடுத்ததால், வைதேகி அவரை அடித்து கொன்றது தெரிந்தது.