/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கனிமவளக் கொள்ளையை எதிர்த்து போராடிய 13 பேர் விபத்தில் உயிரிழப்பு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் குற்றச்சாட்டு கனிமவளக் கொள்ளையை எதிர்த்து போராடிய 13 பேர் விபத்தில் உயிரிழப்பு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் குற்றச்சாட்டு
கனிமவளக் கொள்ளையை எதிர்த்து போராடிய 13 பேர் விபத்தில் உயிரிழப்பு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் குற்றச்சாட்டு
கனிமவளக் கொள்ளையை எதிர்த்து போராடிய 13 பேர் விபத்தில் உயிரிழப்பு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் குற்றச்சாட்டு
கனிமவளக் கொள்ளையை எதிர்த்து போராடிய 13 பேர் விபத்தில் உயிரிழப்பு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் குற்றச்சாட்டு
ADDED : மே 10, 2025 02:24 AM
திண்டுக்கல்,:'கனிமவளக் கொள்ளையை எதிர்த்து போராடிய சமூக ஆர்வலர்கள் 13 பேர் இதுவரை சாலை விபத்தில் பலியாகியுள்ளனர்' என திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 2020ம் ஆண்டு தொழிற்சங்க சட்டங்களை 4 தொகுப்பு சட்டங்களாக மத்திய அரசு கொண்டுவந்தாலும் அமலுக்கு வரவில்லை. இச்சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு தற்போது எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் போர் ஒத்திகை நடத்துவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசின் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் நிரப்பாமல் நிரந்தர பணியிடங்களாக நிரப்ப வேண்டும். பஞ்சமி நிலங்கள் இதுவரை ஒரு ஏக்கர் கூட மீட்கப்படவில்லை. நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் பல தலைமுறைகளாக குடியிருப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு வழங்காமல் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி வெளியேற்றுகின்றனர். ஆனால் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு நீர்நிலை புறம்போக்கு நிலங்களை அரசாங்கமே ஆக்கிரமித்து பயன்படுத்துகிறது.
மக்களுக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் அளித்த பல தீர்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை. கூட்டணி கட்சி என்பதால் அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் நியாயம் என சொல்ல முடியாது. போதை பொருள் புழக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது. மனமகிழ்மன்றங்கள் புதிதாக துவங்கப்பட்டு டாஸ்மாக் இல்லாத நேரத்தில் மன்றங்களில் மதுபாட்டில்கள் கிடைக்கும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இவை சமூக சீர்கேட்டிற்கு வழிவகுப்பதாக உள்ளது.
திருநெல்வேலி, ஈரோடு, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனிமவளக் கொள்ளையை எதிர்த்து போராடிய சமூக ஆர்வலர்கள் 13 பேர் சாலை விபத்து என்ற பெயரில் கொல்லப்பட்டதாக விரிவான கட்டுரை வெளியாகியுள்ளது.
மேலும் தாது மணல் கொள்ளைக்கு எதிராக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் உயர்நீதிமன்ற தீர்ப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு சிறந்த வழக்கறிஞர்களை நியமித்து உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவளக் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என்றார்.