/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டி: ஜூலை 5 சேலத்தில் துவங்குகிறது டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டி: ஜூலை 5 சேலத்தில் துவங்குகிறது
டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டி: ஜூலை 5 சேலத்தில் துவங்குகிறது
டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டி: ஜூலை 5 சேலத்தில் துவங்குகிறது
டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டி: ஜூலை 5 சேலத்தில் துவங்குகிறது
ADDED : ஜூன் 24, 2024 04:21 AM
திண்டுக்கல் : ''ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி 20 தொடர் கிரிக்கெட் போட்டியின் 8வது சீசன் ஜூலை 5 சேலத்தில் துவங்குகிறது,'' என, திண்டுக்கல்லில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் பழனி, உதவி செயலாளர் பாபா, டி.என்.பி.எல்., சி.இ.ஓ. பிரசன்ன கண்ணன் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் திறமையான கிரிக்கெட் வீரர்களை கண்டறியும் விதம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி 20 தொடர் போட்டி 8வது சீசன் சேலத்தில் ஜூலை 5 துவங்கி ஆக. 4 வரை நடக்கிறது. சேலம், கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னை ஆகிய 5 இடங்களில் இப்போட்டிகள் நடக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் தகுதிச்சுற்று 2 இறுதிப்போட்டி மட்டுமே நடக்கிறது. ஜூலை 5 முதல் 11 வரை சேலம், ஜூலை 13 முதல் 18 வரை கோவை, ஜூலை 20 முதல் 24 வரை திருநெல்வேலி, ஜூலை 26 முதல் 28 வரை திண்டுக்கல்லில் போட்டி நடக்கிறது.ஜூலை 30, 31ல் திண்டுக்கல்லில் எலிமினேட்டர் போட்டிகள் நடக்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐ ட்ரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், எஸ்.கே.எம்.,சேலம் ஸ்பார்டன்ட்ஸ் சீகம், மதுரை பேந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் உள்ளிட்ட 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களும் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். டி.ஆர்.எஸ்.,முறை கடைப்பிடிக்கப்படும் இதில் 70 சதவீதம் மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களே பங்கேற்கின்றனர் என்றனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவி செயலாளர் வெங்கட்ராமன், திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் அமர்நாத், என்.பி.ஆர்., காலேஜ் சி.இ.ஓ., சிவக்குமார் உடனிருந்தனர்.