/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/திண்டுக்கல் பொறியாளர் வீட்டில் நகை கொள்ளைதிண்டுக்கல் பொறியாளர் வீட்டில் நகை கொள்ளை
திண்டுக்கல் பொறியாளர் வீட்டில் நகை கொள்ளை
திண்டுக்கல் பொறியாளர் வீட்டில் நகை கொள்ளை
திண்டுக்கல் பொறியாளர் வீட்டில் நகை கொள்ளை
ADDED : ஜூன் 24, 2024 04:21 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பொறியாளர் ரமேஷ் வீட்டில் பூட்டை உடைத்து திருமணத்துக்காக வாங்கி வைத்த 60 பவுன் நகைகள், ரூ.ஒரு லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் 5 வது குறுக்கு தெருவைச் சேர்ந்த பொறியாளர் ரமேஷ்.
இவரது மகள் சென்னை தனியார் வங்கியில் வேலை செய்கிறார். இவருக்கு 2 மாதங்களில் திருமணம் செய்ய முடிவு செய்து ரமேஷ் 60 பவுன் நகைகளை வாங்கினார். நேற்று முன்தினம் ரமேஷ், மனைவியுடன் மேட்டுப்பட்டியிலுள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றார். இரவு அங்கு தங்கிவிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார். முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 60 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.ரமேஷ் புகாரையடுத்து எஸ்.பி.,பிரதீப், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவயிடத்தில் விசாரித்தனர். தொடர்ந்து மோப்பநாய், கைரேக நிபுணர்கள் வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். கொள்ளை நடந்த வீட்டின் எதிர்புறம் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.